Home இலங்கை கல்வி நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள்

நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள்

0

நாடெங்கிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான
முறையில் நடைபெற்றுள்ளது.

குறித்த பரீட்சைக்கு சுமார் 3 இலட்சத்து 23
ஆயிரத்து 879 மாணவர்கள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றிவுள்ளனர். 

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர
புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு, பட்டிருப்பு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு
ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம்
தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.

செய்தி – குமார்

முல்லைத்தீவு

முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
தோற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24
பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெற்றுள்ளது

அந்தவகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381
மாணவர்களுக்காக16 பரீட்சை நிலையங்களிலும் துணுக்காய் கல்வி வலயத்தில்
பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08 பரீட்சை நிலையங்களிலுமாக
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24
பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றுள்ளது 

செய்தி – தவசீலன்

மலையகம்

மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன்
பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை
மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக
இருந்தது. 

செய்தி – திருமல்

அம்பாறை

இன்று காலை ஆரம்பமான குறித்த
பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த
மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை
இடம்பெற்ற நிலையங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version