Home இலங்கை கல்வி பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம்

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம்

0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பாடசாலை கற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்

மேலும், சில பாடசாலைகளில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம் தமது கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அரசாங்கத்துறையைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளன.

மேலும், பெரும் எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

நுவரெலியா

மேலும், அதிபர் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று (09) விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்  மாணவர்களின் வரவு விகிதம் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வருகை தந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தராமையால்
மாணவர்கள் வருகை தந்து வீடு திரும்பி செல்வதாக  தெரிவிக்கப்படுகிறது.

செய்தி – திவாகரன்

கல்முனை 

இலங்கையின் பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பாடசாலைகள்
வெறிச்சோடிக் காணப்பட்டன.

கல்முனை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள்
வரவின்மையால் பாடசாலைகள் நடைபெறவில்லை. இதே வேளை, கல்முனை பிரதான அஞ்சல்
அலுவலகம் மூடப்பட்ட நிலையில் தபால் சேவையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

செய்தி – பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்
ஆசிரியர்கள்,மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள்,ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில்
மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும். பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு
வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தாக கூறப்படுகிறது.

செய்தி – குமார்

புத்தளம் 

இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் இந்து மத்திய பாடசாலைக்கு
குறைந்தளவிலான மாணவர்கள் சமூகமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலயத்திலும் குறைந்தளவிலான
மாணவர்கள் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி – அசார் 

யாழ்ப்பாணம்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்கும் முகமாக அரசுக்கு
அழுத்தம் கொடுக்க மீண்டும் இன்று (09) சுகவீன விடுமுறை
போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் யாழ்ப்பாணத்தில் பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்
பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செய்தி – தீபன்

அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை காரணமாக
பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதை தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதோடு, வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

செய்தி – பசறை நிருபர்

NO COMMENTS

Exit mobile version