Home இலங்கை கல்வி யாழ்.பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

யாழ்.பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

0

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (21.08.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயத்தை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். 

இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட விடுமுறை

மேலும், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு விடுமுறை வழங்குவதற்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பணித்திருந்தார்.

இந்தநிலையில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை இன்று (21) வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version