Home முக்கியச் செய்திகள் இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – வெளியான அறிவிப்பு

இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – வெளியான அறிவிப்பு

0

நாட்டில் சில பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் (Ministry of Education) வழிகாட்டலின் கீழ் சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளனர். 

அந்தவகையில், கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று கற்றல் செயற்பாடுகள்

இந்த விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்தில் இன்று விடுமுறை தினமா என்ற குழப்ப நிலைக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வடக்கு மாகாண பாடசாலைகளில் வழமை போன்று கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. எனவே வட மாகாண மாணவர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தீபாவளிக்கு மறுதினமான இன்று 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சில மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version