Home இலங்கை கல்வி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

0

ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை

இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை,  பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு குழுக்களை அனுப்பி புத்தகபைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.youtube.com/embed/HKl_jzWZOKU

NO COMMENTS

Exit mobile version