Home இலங்கை கல்வி நாட்டிலுள்ள பல பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் முதல் விடுமுறை!

நாட்டிலுள்ள பல பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் முதல் விடுமுறை!

0

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மகிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட, பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையங்கள்

இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தர பாடசாலை ஆகியன இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தர பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20 திகதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version