Home இலங்கை கல்வி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த  மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மீள திறக்கப்படும் பாடசாலைகள் 

இதன்படி, வெள்ள அனர்த்தம் காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களாக உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படும் என அந்த மாகாணங்களின் கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அடுத்த இரண்டு நாட்களில் நாட்டில் மழையின் அளவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை பல பகுதிகளில் தெளிவான வானிலை நிலவியதுடன் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது.

வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version