Home முக்கியச் செய்திகள் ஊழல் குற்றச்சாட்டால் கைது அச்சம் : நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பாடசாலை அதிபர்

ஊழல் குற்றச்சாட்டால் கைது அச்சம் : நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பாடசாலை அதிபர்

0

ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கண்டியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆதாரங்களின்படி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர் அனுமதியில் பாரிய முறைகேடு

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக நியாயமற்ற கட்டணம் வசூலித்ததாக அதிபர் மீது முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் விசாரணையின்போது தமக்குள்ள தொடர்புகளை தெரிவித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலர் நாட்டை விட்ட வெளியேற முயற்சித்து வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

NO COMMENTS

Exit mobile version