Home இலங்கை அரசியல் தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கை குறித்து அதிபர்கள் அதிருப்தி

தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கை குறித்து அதிபர்கள் அதிருப்தி

0

 தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கை தொடர்பில் அதிபர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் தினமன்று இரவு 11 மணியளவில் அரசாங்க ஊழியர்களுக்கு மறுநாள் விடுமுறை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த தீர்மானம் காரணமாக பாடசாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிபர் தரத்தினை உடைய அதிபர்கள் சங்கம் இவ்வாறு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளுக்கு மறுநாள் விடுமுறை வழங்குமாறு அதிபர்கள் சங்கம், கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி எழுத்து மூலம் கோரியிருந்ததகா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தாது தேர்தல் நடைபெற்ற தினத்தில் இரவு 11 மணிக்கு அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக எடுத்த தீர்மானம் தேர்தல் ஆணைக்குழுவின் இயலாமையை குறிப்பதாகவே கருதப்பட வேண்டுமென சங்கம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் அதிகாரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டதனால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில இடங்களில் பாடசாலைகளுக்கு வெளியே வாக்களிப்பு நிலையங்கள் காணப்பட்டதாகவும் அங்கு கொண்டு செல்லப்பட்ட பாடசாலை தளபாடங்கள் உரிய நேரத்தில் மீளக் கொண்டு வரப்படவில்லை எனவும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version