Home முக்கியச் செய்திகள் மாத்திரையால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

மாத்திரையால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

0

மஸ்கெலியாவில்(Maskeliya) பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(10.03.2025) மாலை நல்லதண்ணிகாவல்துறை பிரிவில் உள்ள மறே தோட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றைய தினம் சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்றுள்ளனர்.

உயிரிழந்த சிறுமி

இதன்போது, சிறுமியை பரிசோதித்த மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் சடலம் இன்று(11) டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் சடலம் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

https://www.youtube.com/embed/c5KoLWUTz60

NO COMMENTS

Exit mobile version