Home இலங்கை சமூகம் தேனீ கொட்டுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்

தேனீ கொட்டுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்

0

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேனீக்கள் குத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (30.05.2025) காலை நடைபெற்றுள்ளது.

வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள்

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில்
தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது.

இன்றையதினம் வலயமட்ட
விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை
துரத்தி குத்தியுள்ளது.

இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

NO COMMENTS

Exit mobile version