Home இலங்கை கல்வி பாடசாலை நேரம் அதிகரிப்பு.. கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை நேரம் அதிகரிப்பு.. கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது உரையாடிய பிரதமர், ஒரு பாடத்தின் காலம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“பாடம் அல்லது தொகுதி அவசரமின்றி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். குழு ஆராய்ச்சி மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பல நடைமுறை செயல்பாடுகளை நாங்கள் சேர்த்துள்ளோம்.

பாடத்திற்கான நேரம்.. 

மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை,” என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆரம்பத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பாடசாலைகளை இயக்க முன்மொழியப்பட்டதாக வெளிப்படுத்திய பிரதமர் அமரசூரிய, இறுதியில் பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் மட்டுமே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் அறிவித்துள்ளார். 

போக்குவரத்து போன்ற பிற தளவாட சிக்கல்களைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version