Home இலங்கை கல்வி இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு சீனா வழங்கும் பாடசாலை சீருடைகள்

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு சீனா வழங்கும் பாடசாலை சீருடைகள்

0

Courtesy: Sivaa Mayuri

 சீன அரசாங்கம், 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இலங்கையில் 4.3 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்கவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் உரிய சீன அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

4.3 மில்லியன் சீருடைகள்

அந்தவகையில், 2025 ஆம் ஆண்டிற்கு 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, முதல் தொகுதி சீருடைகள் 2024 நவம்பர் 13 ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21 ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20 ஆம் திகதியும் வழங்கப்படும் என்றும் சீன அரசு உறுதி செய்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version