Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு

0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை
அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று
செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர
செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொருத்தமான பரிந்துரைகள் வெளியிடப்படும்

கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல
விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன,
இதனால் பல மாணவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பொது போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் பாடசாலை மாணவர்களை
ஏற்றிச் செல்வது ஒரு முக்கிய கவலையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தொடர்பாக பொருத்தமான பரிந்துரைகள்
வெளியிடப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version