Home முக்கியச் செய்திகள் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

0

புசல்லாவை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புசல்லாவை – பிளக்பொரஸ்ட் தோட்டத்தில் பாடசாலைக்குச் சென்று, பெற்றோருடன் வீடு திரும்பிய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதையடுத்து குறித்த மாணவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று(27) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மாணவன் 

இந்நிலையில், தரம் நான்கில் கல்வி பயிலும் எட்டு வயது நிரம்பிய பாடசாலை மாணவரொருவர் சிகிச்சை பலனின்றி இன்று(28) காலை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புசல்லாவை மற்றும் கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version