Home இலங்கை சமூகம் விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு வெளியான அறிவிப்பு

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு வெளியான அறிவிப்பு

0

சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை மத்திய மாகாண பிரதம செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

அத்துடன் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கும் மேலும் 37 பாடாலைகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் விடுமுறை

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் மூடப்படும்.

மேலும், கல்வி அமைச்சின் அறிவிப்பின் படி, பாடசாலைகள் மே 07 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

NO COMMENTS

Exit mobile version