Home முக்கியச் செய்திகள் வடக்கில் நாளை பாடசாலை செயற்பாடு :ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு

வடக்கில் நாளை பாடசாலை செயற்பாடு :ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு

0

 தீபாவளி தினமான இன்று (20) அரச விடுமுறையாக இருந்தபடியால் பாடசாலைகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நாளையதினம் பாடசாலை விடுமுறை தினமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியிலும்
ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள்
தள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள் வழமை போல் இயங்கும்

இந்நிலையில் இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை தொடர்புகொண்டு
வினவியவேளை, நாளையதினம் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல்
இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே மாணவர்கள் வழமைபோன்று பாடசாலைக்கு சமுகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version