Home இலங்கை பொருளாதாரம் இரண்டாவது நாளாகவும் ஐ.எம்.எப் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

இரண்டாவது நாளாகவும் ஐ.எம்.எப் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

0

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

நோக்கம் 

இதன் போது, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேநேரம், மக்கள் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழியில் செல்வதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினமும் நாணய நிதியத்தின் பிரநிதிகளுக்கு ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதில் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி உறுதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version