2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை,
இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம், முன்மொழியப்பட்ட மாற்றங்கள்
குறித்த கருத்துக்களை பெற்றுக்கொள்ள மாகாண மட்டத்தில் பொது ஆலோசனைகளை நடத்த
திட்டமிட்டுள்ளது.
ஆலோசனைகள்
இதன்படி, 9 மாகாணங்களிலும் 2025 மே 23 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை
பொதுமக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தோரின் ஆலோசனைகள் 2025 ஜூன் 5ஆம்
திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில் மின்சார சபையின் இரண்டாவது முன்மொழிவை, www.pucsl.gov.lk
என்ற இணையத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
