Home இலங்கை அரசியல் பசிலின் காலத்தில் நடந்த மோசடி: முன்னிலையான ரகசிய சாட்சியம்!

பசிலின் காலத்தில் நடந்த மோசடி: முன்னிலையான ரகசிய சாட்சியம்!

0

சுற்றுலா அபிவிருத்திக்காக 2014 ஆம் ஆண்டு ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமான செலவில் டி-சர்ட்கள் அச்சிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு ரகசிய சாட்சியாளர் நீதிமன்றில் முன்னிலைகியாகியுள்ளார்.

இந்த நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) முன்னிலையாக அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிதி மோசடி தொடர்பான உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ரகசிய சாட்சியம்

இந்த நிலையில், இது தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்த ரகசிய சாட்சியத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த ரகசிய சாட்சியம் பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version