தமிழர் பிரதேச மக்களை இலங்கை புலனாய்வு துறை எப்பொழுதும் கவனித்துக்கொண்டு இருப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் எவ்விதத்திலும் எழுச்சி கொள்ள கூடாது என்பதில் இலங்கை புலனாய்வு துறை கவனமாக இருக்கும்.
அனைத்துலக ஊடகங்களும் தமிழ் மக்கள் மீதான தமது பார்வையை திருப்பியுள்ளதை இலங்கை புலனாய்வு துறை அறிந்துள்ள நிலையில், அது தீவிரமாக தமிழ் மக்களை தொடர்ந்து கவனிக்கும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நகழ்வு, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விவகாரத்தில் எடுக்கபோகும் நடவடிக்கை, தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம் மற்றும் பலதரப்பட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/X8nqVn3XDnE
