இலங்கையின் சிலாபம் (Chilaw), ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் குழுவொன்று பராமரிப்பு நோக்கத்திற்காக இவ்வாறான அவசர அகழ்வை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சுரங்கப்பாதைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செங்கல் சுவரின் ஒரு பகுதியும் தோண்டப்பட்ட இடத்தில் மிகத் தெளிவாகக் காண கூடியதாய் உள்ளது.
எதிர்கட்சி தலைவரால் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கமுடியும்: சாணக்கியன் சுட்டிக்காட்டு
இரகசிய சுரங்கப்பாதை
தற்போதைய சிலாபம் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிடம் டச்சு காலத்தில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் வரலாற்று ஆய்வாளர் டேவிட் கயான் இந்திக்க தெரிவிக்கையில், அந்த சிறைச்சாலையில் இருந்து சிலாபம் துறைமுகம் வரை ரகசிய சுரங்கப்பாதை இருந்ததாக தொல்லியல் பதிவுகள் இருப்பதாக தெரிகின்றது.
இந்த சுரங்கப்பாதையின் பாகங்கள் இதற்கு முன்னரும் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது தொடர்பாக முறையான அகழ்வாராய்ச்சி எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
விரைவில் தோண்டும் பணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் அரசியல் களம்: தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு: அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
https://www.youtube.com/embed/QR3AhyOLC6c