வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை, துபாயை தளமாகக் கொண்ட குற்றவாளிகளால் திட்டமிடப்பட்டதை பொலிஸ் விசாரணைகளில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான ‘மிதிகம சூட்டி’, இந்தக் கொலைச் சதியில் முக்கிய நபராக காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள ‘மிதிகம சூட்டி’ என்பவர் கடந்த ஜூன் மாதம் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், இந்த கொலையில் எவ்வாறு தொடர்புபட்டிருப்பார் என்பதில் பொலிஸாருக்கு பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கீழ்வரும் காணொளி..
