Home முக்கியச் செய்திகள் லசா கொலை சந்தேக நபரை காணொளி எடுத்த காவல்துறையினருக்கு கடும் சிக்கல்

லசா கொலை சந்தேக நபரை காணொளி எடுத்த காவல்துறையினருக்கு கடும் சிக்கல்

0

 வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காணொளி பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் குறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கும் எதிர்கால நீதித்துறை நடைமுறைகளுக்கும் தீங்கு விளைவிப்பதால் இந்த சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

யாரால் காணொளி பதிவு செய்யப்பட்டது?

  காணொளி பதிவு மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்டதா அல்லது காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதா என்பது விசாரணைகளில் கண்டறியப்படும் என்று அவர் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version