மன்னாரில் புதிது புதிதாக மறைமுகமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று
வருகின்றன என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (30.06.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“மன்னார் முனையம் என்ற பெயரில் அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக
அறிகின்றோம். மன்னார் பகுதி என கூறப்பட்டாலும் எந்த பகுதி என
தெரியவில்லை.
மேலும், குறித்த வேலைத்திட்டத்திற்கு அப்பால் பல்வேறு வேலைத்திட்டங்கள்
இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,