Home இலங்கை அரசியல் அம்பாறை – வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை

அம்பாறை – வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை

0

நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்று வந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அம்பாறை(Ampara) – சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுமூகமாக தீர்வு

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர், 

சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதில் முஸ்லிம் – தமிழ் உறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, கலையரசன், பள்ளிவாசல் தலைவர், கோவில் தலைவர், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள தலைவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் போன்றவர்களிடம் இதற்கு பொறுப்பான திணைக்களத்தின் வரைவு படங்களையும் மற்றும் வளைவு கோபுரம் அமைக்கு பகுதியில் காணப்படும் முஸ்லிம் தமிழ் மக்களின் குடும்ப எண்ணிக்கை விபரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கான தீர்வை ஒருமாதம் பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி – போக்குவரத்து – நீர்ப்பாசனம் – நீர் வழங்கல் – கிராமிய வீடமைப்பு – கிராமிய மின்சாரம் – கட்டிட நிர்மாண அமைச்சுக்களின் செயலாளராக எம்.கோபால இரத்தினம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் .எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம். முகம்மட், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் எம்.ஐ.எம் றனுஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். சகில், ஐக்கிய தேசியக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் வாஸித், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வீரமுனை கோவில் உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு செய்திகளை சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version