Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பில் வெளியாகிய அறிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பில் வெளியாகிய அறிக்கை

0

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு சுமார் 110 கோடி ரூபாவாகும் என பொலிஸ் தலைமையக அறிக்கை தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60 ஆக மாற்றியமைத்து பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவு செய்யப்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால் பாதுகாப்பில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version