எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் முன்னணி போட்டியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
அதன்படி, முன்னணி வேட்பாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சு பிரிவு (MSD) மற்றும் விசேட அதிரடிப் படையினர்கள் (STF) நியமிக்கப்படவுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறிப்பாக, நான்கு முக்கிய அரசியல் வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சஜித் பிரேமதாச (Sajith Premadasa), அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (15) வேட்புமனு தாக்கல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே தங்கள் பிரச்சார பேரணிகளை தொடங்குவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தனிநபர் மற்றும் அவர்களின் அச்சுறுத்தல் மதிப்பீடுகளைப் பொறுத்து மாறுபடும்.
பிரச்சாரக் கூட்டங்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் நேற்று (14) முடிவடைந்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான குழு ஒவ்வொரு வேட்பாளருக்குமான ஒருங்கிணைப்பாளர்களைச் சந்தித்து, செயற்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரும் தங்கள் வேட்பாளர்கள் வரவிருக்கும் பிரச்சாரக் கூட்டங்களின் அட்டவணையை வழங்குமாறு குழு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் பேரணிகள் நடைபெறும் இடத்தைப் பொறுத்து வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு மாறுபடும் என கூறப்படுகின்றது.