Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரி

0

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் பனிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ்நதநிலையில், தேசிய இறைவரித் திணைக்களத்தின் விசாரணை தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக அசங்க கைது செய்யப்பட்டுள்ளார். 

இணைய ஊடகம்

அத்தோடு, இணைய ஊடகமொன்றுக்கு அசங்க வழங்கிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நேர்காணல் தற்பொழுது இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/security-officer-arrested-at-katunayake-airport-1721539249?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version