Home இலங்கை அரசியல் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலைபாட்டில் சுமந்திரன்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலைபாட்டில் சுமந்திரன்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மன்னார் பேருந்து நிலையத்தில் இன்று (05.09.2024) மக்கள் மத்தியில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு

தமிழ் அரசியல் கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி
ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இங்கு சஜித் பிரேமதாச மட்டுமல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அனைத்து
அரசியல் கட்சிகளுமே கூட்டணிகள் உருவாகும் போது ஒப்பந்தங்களை தூக்கி எறிந்து
விடுவார்கள்.

அநுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்‌ச, திலித் ஜயவீர போன்றவர்களும்
அவ்வாறானவர்களே.

வடக்கு – கிழக்கு மக்கள்

இவ்வாறான தலைவர்களை தெரிவு செய்தால் மேலும் பாதிப்படைவது
வடக்கு, கிழக்கு மக்களே.

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

வடமாகாணத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு இதுவரை எந்த தீர்வும்
எட்டவில்லை.

அப்பாவிப் பொது மக்களை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.எனவே தமிழ்
மக்கள் சிந்தித்து உங்கள் வாக்குகளை “டிரக்ரர்” சின்னத்துக்கு அளிக்க வேண்டும்
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version