Home இந்தியா ஆயிரக்கணக்கான ஆடு – மாடுகளுடன் சீமான் தலைமையில் மாநாடு

ஆயிரக்கணக்கான ஆடு – மாடுகளுடன் சீமான் தலைமையில் மாநாடு

0

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு இன்று (10.07.2025) மதுரை விராதனூர் பகுதியில் நடைபெறுகிறது. 

இந்த மாநாடு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் முழுமையாக கவனித்து வருகிறார். இயற்கை விவசாயம், கள் எடுக்கும் உரிமை, தேவையற்ற நவீன வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசிவருகிறார் சீமான்.

இந்த சூழலில் கால்நடைகள் வனப்பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார். 

வரலாற்றில் முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடைபெறுவது கவனம் பெற்றுள்ளது.

இந்த மாநாட்டை ஐபிசி தமிழ் வழியாக நீங்கள் நேரடியாக காணலாம்….

https://www.youtube.com/embed/rRj7EBY_1NY

NO COMMENTS

Exit mobile version