Home முக்கியச் செய்திகள் கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

0

2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு: ரணில் விடுத்துள்ள உத்தரவு

நேர்முகப் பரீட்சை

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பெறுபேற்றின் (G.C.E A/L) அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினர் ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர். 

மேற்படி ஆட்சேர்ப்புக்குரியதான பாடநெறிகளுக்கான தகைமைகளைப் பரிசோதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதானது தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிபெறுவதற்கான தகைமையல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

ஆசிரியர் மாணவர் விபரம் : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் கல்வித் தளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

Exit mobile version