Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : இருவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : இருவர் கைது

0

கண்டி (Kandy) மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற பெயரில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்தநிலையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி சுமார் இரண்டு மில்லியன் ரூபா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

போதைப்பொருள் பெறுமதி 

அத்தோடு, இந்த மோசடி நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மற்றும் போதைப்பொருள் தொகையையும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/selling-drugs-to-school-students-1718609036

NO COMMENTS

Exit mobile version