Home இலங்கை அரசியல் வடக்கில் அனுஸ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம்

வடக்கில் அனுஸ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம்

0

வவுனியாவில் தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம் இன்று(31) அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரசந்திக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று(31) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் தந்தை செல்வா தொடர்பான நினைவுரையினை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நா.சேனாதிராஜா நிகழ்த்தியிருந்தார்.

யாழ்ப்பாணம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை
செல்வநாயகத்தின் 127ஆவது ஜனன தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் பதில்
பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாணத்தில்
அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலிகளைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – ராகேஸ்

NO COMMENTS

Exit mobile version