Home இலங்கை அரசியல் 9 கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படுத்தியுள்ள விடயம்

9 கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படுத்தியுள்ள விடயம்

0

அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுத்ததாகவும், எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (10.03.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போட்டியிட உள்ளது.

யாழ்ப்பாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம்.

ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் அங்கத்துவக் கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளோம்.

அதற்கான கட்டுப் பணத்தை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒட்டு மொத்தமாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து சபைகளிலும் போட்டியிடும்.

மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல்

மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை மீள பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்கான தேர்தல் அறிவிக்கப்படும்
சந்தர்ப்பம் உள்ளது.

எனவே மன்னார் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். ஜனநாகய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மாத்திரமே ஒரு கூட்டாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுக்கப்பட்டது. எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளோம் என்று தெரிவிக்கவில்லை. 9 கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மாத்திரமே முன்னெடுத்தோம்.

எனினும் இக்கூட்டு யாழ்ப்பாணத்தில் மாத்திரமே அமைய இருக்கின்றது என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version