Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தில் ஐபிசி தமிழ் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டும் செல்வம் அடைக்கலநாதன்!

நாடாளுமன்றத்தில் ஐபிசி தமிழ் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டும் செல்வம் அடைக்கலநாதன்!

0

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் வாயிலாக தன்னைப் பற்றி வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (13.11.2025) நடைபெற்ற  கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குரல் பதிவுகள்

ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் அண்மைய தினங்களாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

போலியான குரல் பதிவுகளை முகநூலில் பகிரந்து தவறான அவதூறுகளை முன்வைத்துள்ளதாகவும் இதனால் தான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐ.பி.சி தமிழ் ஊடகத்தை சுட்டிக்காட்டி தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், குறித்த விடயத்தினை சிறப்புரிமை குழுவிடம் அறியப்படுத்தி தனக்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு மறுப்பு

எவ்வாறாயினும், இங்கு செல்வம் அடைக்கலநாதனால் குற்றம் சுமத்தப்படும் எமது ஊடகமான ஐ.பி.சி தமிழ் இந்த விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தும் முன்னர் அவர் சார்பிலான கருத்துக்களை விடயங்களை ஆராயும் நோக்கில் செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொள்ளவும், அவர் தரப்பு நியாயங்களை வினவும் பல முறை முயற்சி செய்த போதிலும் அவரை எந்தவொரு விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதுமாத்திரமன்றி, ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கூட இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்கவில்லை இல்லை என மறுக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/xeoja8gPPbA

NO COMMENTS

Exit mobile version