Home இலங்கை அரசியல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்(dtna) தலைவராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை(selvam adaikalanathan) நியமிப்பதற்கு
திட்டமிட்டு இருப்பதாக கூட்டணியின் பங்காளி கட்சியின் முக்கியஸ்தர்
தெரிவித்தார்.

டெலோ(telo), புளொட்(plot), ஈ.பி.ஆர்.எல்.எப்(eprlf), தமிழ் தேசிய
கட்சி உட்பட 7 பங்காளி கட்சிகளை உள்ளடக்கிய வகையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி செயல்பட்டு வருகின்றது.

ஒற்றை தலைமையின் கீழ் தமிழ் தேசியக் கூட்டணி

தற்போது இதன் தலைமைத்துவம் இணைத்தலைமைகளாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களை
உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வாரம் வவுனியாவில்(vavuniya) இடம் பெற்ற கூட்டணியின் மத்திய செயற்குழுக்
கூட்டத்தின் போது ஒற்றை தலைமையின் கீழ் தமிழ் தேசியக் கூட்டணியை செயல்பட
வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

   செல்வம் அடைக்கநாதனை தலைவராக நியமிக்க தீர்மானம்

இதன் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு
கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற
உறுப்பினருமான செல்வம் அடைக்கநாதனை தலைவராக நியமிப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பங்காளி கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்
தெரிவித்திருந்தார்.

 புளொட் அமைப்பின் சார்பில் செயலாளர் தற்போது நியமிக்கப்பட்டு
இருப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஒரு கட்சியின் தலைவர்
என்ற வகையிலும் செல்வம் அடைக்கல நாதனை நியமிப்பது சிறந்த விடயமாக இருக்கும் என
தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version