Home முக்கியச் செய்திகள் நிலந்த ஜயவர்தன காவல்துறை சேவையிலிருந்து அதிரடியாக பணிநீக்கம்

நிலந்த ஜயவர்தன காவல்துறை சேவையிலிருந்து அதிரடியாக பணிநீக்கம்

0

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும்,
சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை காவல்துறை சேவையிலிருந்து
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த
ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் தேவையான
நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை தொடர்பான ஒழுக்காற்று விசாரணையில் அவர்
குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் 

தேசிய காவல்துறை ஆணைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில், நேற்று
(ஜூலை 19) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க தலைமையில் கூடிய
ஆணைக் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, நிலந்த ஜயவர்தன அரச
புலனாய்வு சேவையின் பணிப்பாளராகப் பதவி வகித்தார்.

தாக்குதலுக்கு முன்னதாக
வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து துல்லியமான தகவல்கள்
கிடைக்கப்பெற்ற போதிலும், அச்சுறுத்தலின் தீவிரத்தை உரிய அதிகாரிகளுக்குத்
தெரிவிக்கவோ அல்லது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவோ அவர்
தவறியதாக ஒழுக்காற்று விசாரணைகள் சுட்டிக்காட்டின.

NO COMMENTS

Exit mobile version