Home இலங்கை சமூகம் சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார்..!

சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார்..!

0

முன்னாள் சிரேஸ்ட அரச ஊழியரான பிரட்மன் வீரக்கோன், 94 வயதில் காலமானார் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்பது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கு சிரேஸ்ட ஊழியராக இவர் பணியாற்றியுள்ளார்.

1954 இல் இலங்கை அரச சேவையில்

பிரட்மன் வீரக்கோன் களுத்துறையில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் கல்விக் கற்றார்.

பின்னர் குருதலாவ சென் தோமஸ் கல்லூரியின் முதல் விடுதி மாணவரானார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் இரண்டாம் வகுப்பு (மேல் பிரிவு) இளங்கலைப் பட்டதாரியாவார்.

பிரட்மன் வீரக்கோன் 1954 இல் இலங்கை அரச சேவையில் சேர்ந்து தீவின் பல பகுதிகளில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version