Home உலகம் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் பொதுவெளியில் தோன்றிய ஹிஸ்புல்லா தளபதி

போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் பொதுவெளியில் தோன்றிய ஹிஸ்புல்லா தளபதி

0

 கடந்த மாதம் ஒரு வெளிப்படையான படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய ஒரு மூத்த ஹிஸ்புல்லா தளபதி, போர்நிறுத்த முயற்சிகள் இடம்பெறும்வேளை பகிரங்கமாக தோன்றியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி மத்திய பெய்ரூட்டில் நடந்த ஒரு தாக்குதலில் ஹிஸ்புல்லா தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவுத் தலைவர் வஃபீக் சஃபா(Safa) உயிர் தப்பினார், ஆனால் அந்த நேரத்தில் அவர் மோசமாக காயமடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

எவ்வித காயங்களும் இன்றி புன்னகைக்கும் படம்

ஆனால் வெளியான படங்களில், சஃபா எந்தவிதமான நோய்களும் இல்லாமல், ஒரு கல்லறையில் மற்ற இருவருடன் நின்று புன்னகைக்கும் படம் வெளியாகி உள்ளது.

சஃபாவை 2019 இல் அமெரிக்க(us) திறைசேரி தடை செய்வதாக அறிவித்தது. அத்துடன் அவரை லெபனான்(lebanon) பாதுகாப்புப் படைகளுக்கு ஹிஸ்புல்லாவின் உரையாசிரியர் என்று விவரித்தது.

படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுடன்(Hassan Nasrallah) இவர் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தவர் எனவும் அந்த அமைப்பிற்கு தேவையான ஆயுத விநியோகங்களை மேற்கொள்பவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: https://ibctamil.com/article/senior-hezbollah-terrorist-seen-in-public-1732768775

NO COMMENTS

Exit mobile version