Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

0

Courtesy: H A Roshan

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரனின் தலைமையில் நேற்று முன்தினம் (10) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் 

இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்புகள், கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபரினால் தெளிவூட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த செயலமர்வில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

Source: https://tamilwin.com/article/senior-presiding-officers-elections-meeting-1726079388

NO COMMENTS

Exit mobile version