Home இலங்கை ரஜினிகாந்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான் !

ரஜினிகாந்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான் !

0

இந்தியாவிற்கு (India) விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ரஜினிகாந்தை (Rajinikanth) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது விஜயவாடாவில் (Vijayawada) இடம்பெற்றுள்ளது.

நினைவு முத்திரை

மேற்படி சந்திப்பின் போது இலங்கையில் (Sri Lanka) உள்ள தோட்ட சமூகத்தின் 200 ஆவது ஆண்டுக்கான நினைவு முத்திரையை ரஜினிகாந்திற்கு செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.

மேலும், இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) மற்றும் அமைச்சர் ஜே.பி.நட்டா (J. P. Nadda
) ஆகியோரையும் அண்மையில் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/senthil-thondaman-met-super-star-rajinikanth-1718517604

NO COMMENTS

Exit mobile version