Home இலங்கை பொருளாதாரம் தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

 தேயிலை பெருந்தோட்டத்துறை வங்குரோத்து அடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

ரணிலின் திடீர் முடிவால் குழப்பத்தில் அமைச்சர்கள்

சம்பள அதிகரிப்பு

உற்பத்தி வினைத்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பு முறைமையே உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை கருத்திற் கொள்ளாத சம்பள அதிகரிப்புக்கள் ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையை வங்குரோத்து அடையச் செய்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஈரானுடனான கடன் மறுசீரமைப்பு: அரசாங்கம் விளக்கம்

இரண்டாயிரம் ரூபா சம்பளம் 

பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் ரூபா சம்பளம் ஈட்டக்கூடிய யோசனை ஒன்றை தமது சம்மேளனம் முன்மொழிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முன்மொழிவானது உற்பத்தி வினைத்திறனை அடிப்படடயாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டாக இணைந்து கிரமமான ஓர் முறையின் கீழ் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

இளம் தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version