Home இலங்கை அரசியல் பொருளாதாரம் வளர்ச்சியடைய கிழக்கு ஆளுநர் ஆலோசனை

பொருளாதாரம் வளர்ச்சியடைய கிழக்கு ஆளுநர் ஆலோசனை

0

பொருளாதார ரீதியில் நாம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில்
செய்யும் மக்கள் இந்த நாட்டில் வளர்ச்சியடைய வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு(Batticaloa) – களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட
மூன்று கடைத்தொகுதிகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(16.06.2024) மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வழிகாட்டுதல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுக்கும் போது நாட்டை இழுத்து மூடும் நிலைமையில்தான்
இருந்தது. 

மருந்து இல்லை, பெட்ரோல் இல்லை, உணவு, மா, அரிசி, எதுவும் இல்லாத
நிலமையிலேதான் இருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னெடுத்து,
நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கினார். 

எனினும், ஒரு நாளில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடையாது.

படிப்படியாகத்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஒரே நேரத்தில்
முழுமையான தீர்வு வராது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் ஜனாதிபதி இந்த நாட்டை மீண்டும் வாழ வைக்க
முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளார். 

ஜனாதிபதியின் வழிகாட்டுதலின்
பெயரில் மக்கள் அதிகளவு வந்து செல்லும் இடங்களை நாம் அதிகளவு கருத்திற் கொண்டு,
நான் சுமார் 12 புதிய பொதுச் சந்தைக் கட்டடங்களை திறந்து வைத்துள்ளேன்.

பொருளாதார ரீதியில் நாம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில்
செய்யும் மக்கள் இந்த நாட்டில் வளர்சியடைய வேண்டும். அப்போதுதான் இலங்கை ஒரு
வல்லரசு நாடாக மாறும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version