Home சினிமா 2வது முறை கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை அனு விக்னேஷ்.. கணவர் மகனுடன் வெளியிட்ட...

2வது முறை கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை அனு விக்னேஷ்.. கணவர் மகனுடன் வெளியிட்ட கியூட் போட்டோ

0

நடிகை அனு 

ஆபிஸ், ஆண்டாள் அழகர், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை அனு விக்னேஷ்.

சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அதிகம் பிரபலம் ஆனார். விஜய் டிவியிலும் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறார்.

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மணமகளே வா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

குட் நியூஸ்

விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அனுவிற்கு முதல் மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் தான் 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார் அனு. தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்துடன் இந்த சந்தோஷ செய்தியை கூறியுள்ளார்.

சின்னத்திரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள அனுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதோ அவர் வெளியிட்ட போட்டோஸ்,

NO COMMENTS

Exit mobile version