கிருத்திகா அண்ணாமலை
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் கிருத்திகா அண்ணாமலை.
அழகு, திமிரான நடிப்பு, உயரம் என இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டான திரைப்பயணத்தில் அமைந்துள்ளது. வில்லத்தனம் சரியாக செட் ஆகிறது என நிறைய சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்… புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க
முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்திருப்பவர் விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியலில் நடித்திருந்தார்.
தற்போது ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கார்
அடுத்தடுத்து சீரியல்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் கிருத்திகா அண்ணாமலை Mahindra BE6 Batman Edition 001 காரை வாங்கியுள்ளார்.
கருப்பு நிற புதிய காரை வாங்கியுள்ள கிருத்திகா, வாங்குவது முதல் புதிய காரை ஓட்டுவதை வரை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
