ஸ்ருதி ப்ரியா
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற பிரபலமான தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
அதைத்தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதி கண்ணம்மா என சில சீரியல்கள் நடித்து வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி, மூன்று முடிச்சு ஆகிய தொடர்களில் இப்போது நடித்து வருகிறார்.
நடிகை பதிவு
கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் ஸ்ருதி சண்முகப்பிரியா.
ஆனால் எதிர்ப்பாராத விதமாக ஆகஸ்ட் மாதம் அரவிந்த் மாரடைப்பால் காலமானார்.
அதன்பின் ஸ்ருதி தனது கணவர் நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார்.
1500 நாட்கள் உன்னுடன் என் காதலே என தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார்.
