Home இலங்கை அரசியல் ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவையை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவையை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

 மன்னாரில் ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை நிகழ்வை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மன்னார் நகரசபை மைதானத்தில் இரண்டு நாட்கள் இடம் பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையின் முதல் நாள் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இன்று (20)இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரினுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

 நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் குறித்த நிகழ்வில் வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோர்தனாதலிங்கம், எவரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்ததுடன் முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் குலசிங்கம் திலீபனும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்திற்கு பொருத்தமில்லாத பொது வேட்பாளர் :பிள்ளையான் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version