இலங்கை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (09.08.2025) முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பிராந்திய காவல் நிலையங்களையும் உள்ளடக்கிய விசேட சோதனை நடவடிக்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது.
விசேட சோதனை
அதன்படி, நேற்று 25,503 பேர் சோதனை செய்யப்பட்டதுடன், இதன்போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக 29 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் 704 சந்தேக நபர்களையும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 203 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் நேற்றைய இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,369 பேர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
