Home முக்கியச் செய்திகள் சி.ஐ.டியில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள்

சி.ஐ.டியில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள்

0

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) முன்னிலையாகியுள்ளனர்.

இந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை அமைச்சர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், முன்னாள் அமைச்சர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 நான்கு அமைச்சர்கள் முன்னிலை

இதன்படி, முன்னாள் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச(wijeydasa rajapaksa), நளீன் பெர்னாண்டோ,(nalin fernando) விதுர விக்கிரமநாயக்க(vidurawickramanayakd) மற்றும் நசீர் அஹமட்(Nasir Ahmed) ஆகியோர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda)வும் இந்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version